பூந்தமல்லி அருகே குட்கா விற்ற கடைகளுக்கு சீல்
அம்பத்தூர், அக். 2- பூந்தமல்லி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.கதிரவன் தலைமையில் பூந்தமல்லி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் உள்ளிட்ட ஊழியர்கள் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் ஊராட்சி கே.கே நகர் 3ஆவது தெருவில் உள்ள கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து முதல் முறையாக விற்பனை செய்யப்பட்ட கடைக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறையாக பிடிபட்ட மற்றொரு கடைக்கு 50 ஆயிரம் ரூபாயும் அபாரதம் விதித்து அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.