tamilnadu

வெளி மாநிலத்தவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு அனுப்புக

திருவள்ளூர், ஏப்.15- பீகார் போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள்ஜனநாயக கடமையான வாக்களிக்கும் உரிமையை இழந்துசெங்கல் சூளைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை மீட்டு சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பூச்சிஅத்திப்பேடு, தாமரைப்பாக்கம், மேல்முதலம்பேடு, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்டு மாவட்டம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் ஏராளமான செங்கல் தொழிலகங்களை நடத்தி வருகின்றனர். செங்கல் தொழிலகங்கள் அனைத்தும் ஆறு மற்றும் ஏரிகளை ஒட்டியே அமைந்துள்ளது. மண்ணையும் நிலத்தடி நீரையும் கொள்ளையடிக்க ஏதுவாக அமைக்கின்றனர். அரசு நிலத்தையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பீகார், ஒரிசா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரகணக்கானவர்கள் வேலை செய்யும் இடங்களில் சிறு குடிசைகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் போது முன்பணம் பெற்றுக்கொண்டு பணிக்கு வருவதால் தங்கள் குடும்ப விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக  கூறுகின்றனர். மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு செல்ல செங்கல் சூளை உரிமையாளர்கள் அனுமதிக்கப்படுவ தில்லை. கேட்டால் தொழில் பாதிக்குமாம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் வந்தால் மட்டுமே சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க அனுமதிக்கின்றனர். காரணம்வேலை ஆட்களை தமிழ்நாடு போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதே இந்த உள்ளாட்சி நிர்வாகிகள் மூலம்தான் அனுப்பப்படுவதாக கூறுகின்றனர். இதனால் உள்ளாட்சிதேர்தலில் வாக்களிக்க மட்டும் அனுமதிக்கின்றனர்.சொந்த மண்ணில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் பல நூற்றுக்கணக்கான கி.மீ கடந்து வந்து உறவுகளை எல்லாம்விட்விட்டு, கொத்தடிமைகளாய் பணியாற்றி வருவதற்கு மத்திய அரசு தான் காரணம். மக்களுக்கான அரசை தேர்வு செய்ய வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிக்கும் உரிமையை தடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சொந்த ஊர்களுக்கு சென்று வர போக்குவரத்து செலவை செங்கல் சூளை உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என அதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.