tamilnadu

img

தமிழர் மரபுகளை கெடுக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம்.... 1 கோடி பேரை சந்திக்க மக்கள் ஒற்றுமை மேடை முடிவு....

சென்னை:
தமிழர்களின் நல்ல மரபுகளை கெடுக்கும் சங்பரிவாரங்களின் வகுப்புவாத தீய பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி ஒரு கோடி பேரைச் சந்திக்கும் மாபெரும் மக்கள் இயக்கத்தை நடத்த  மக்கள் ஒற்றுமை மேடை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி சங் பரிவாரமானது தனது வகுப்புவாதப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருப்பதைக் கூட்டம் கவலையோடு நோக்கியது. மத நல்லிணக்கமானது தமிழர்களின் ஒரு நல் மரபாகும். அதைக் கெடுக்க முனையும் இழிசெயலில் அவர்கள்  இறங்கியிருக் கிறார்கள். அதுவும் தமிழின் பெயராலும் தெய்வீகத்தின் பெயராலும்அதைச் செய்யத் துணிந்திருக்கிறார் கள். “அன்பே சிவம்” எனும் தமிழ்ச் சொல்லாடல் ஒன்று போதும் தமிழும் தெய்வீகமும் மதப் பகைமைக்கு எதிரானவை என்பதை உணர்த்த. இதையெல்லாம் மறைத்துத்தான் இந்த தீய பிரச்சாரத்தை அவர்கள் செய்து வருகிறார்கள்.

“இந்துக்களுக்கு ஆபத்து” எனும் பரப்புரையிலும் இறங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் 88 சதவீதம்பேர் இந்துக்கள். மத்திய, மாநில ஆட்சியாளர்களின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டிருப்பது இந்த பெரும்பான்மை இந்துக்களும்தான். அந்த அநீதிக்கொள்கைகளை எதிர்க்காதவர் கள்தாம் இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்களாம்! அவர்கள் இந்துக்கள் மீது வைத்திருப்பது பொய்யான அன்பு. அவர்களது வார்த்தைகள் மதப் பகைமையை மூட்டுவதற்கான நைச்சியப் பேச்சு.“இந்துக்களுக்கு ஆபத்து” என்பவர்கள், போராடும் இந்து விவசாயிகள் பற்றியோ, வேலையின்றித் தவிக்கும் இந்து இளைஞர்கள் பற்றியோ, இடஒதுக்கீட்டை பறிகொடுத்து நிற்கும் இந்து எஸ்சி/பிசிக்கள் பற்றியோ, இந்தி-சமஸ்கிருத திணிப்பால் துயருறும் இந்து தமிழர்கள் பற்றியோ பேசுவதில்லை, ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமைகள் பறிபோவது பற்றியும் பேசுவதில்லை.

இதுதொடர்பாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில செயல்பாட்டுக் குழுக் கூட்டம் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் ஜனவரி 2 அன்று கூடி விவாதித்தது. இக்கூட்டத்தில் தாவூத்மியாகான், வன்னிஅரசு, சிக்கந்தர், பாலபாரதி, பேரா. காஜாகனி, பேரா. பொன்ராஜ், எம். ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் உள்ளிட்ட பலரும்  பங்கேற்றனர்.

தமிழகத்தில் மதவெறியர்களின் இழிதிட்டங்களை அடையாளம் காட்டும் வகையிலும், இந்துக்கள்உள்ளிட்ட அனைத்து வெகு மக்களின் உண்மையான பிரச்சனைகளை எடுத்துரைக்கும் விதத்திலும் துண்டறிக்கை மற்றும் காணொலிக்காட்சிகளைத் தயாரிப்பது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்தது. இவற்றைக் கொண்டு ஒரு கோடிப் பேரைச் சந்திப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.இந்த இயக்கத்தை குடியரசு நாளாம் ஜனவரி 26இல் துவங்கி, காந்திமகான் தியாகியான ஜனவரி 30 ஆம் தேதி வரை நடத்துவது என்றும், அந்தநாளில் மத நல்லிணக்கம் காக்க உறுதி மொழி ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.மனிதநேயத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று மேடை கேட்டுக் கொண்டுள்ளது