சென்னை, ஜூன் 3- ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி புதனன்று (ஜூன் 3) சென்னை எழிலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழி லாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5ம் கட்ட ஊரடங்கைஅமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்க காலத்தில் ஷேர்ஆட்டோ, அபே ஆட்டோ, லோடு ஆட்டோ, வேன் போன்றவை இயங்கவில்லை. எனவே, இத்த கைய வாகனங்களை இயக்கும் ஒட்டுநர்க ளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்துள்ள அரசு, டாடா மேஜிக் வாக னத்தை 7 பேருடனும், அபே ஆட்டோவை 3 பேருடனும், மேக்சிகேப் வண்டிகள் 12 பேருடனும் இயங்க அறிவிப்பு வெளியிட வேண்டும். வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட நிவா ரணத் தொகுதி தகுதி இருந்தும் பலருக்கு கிடைக்காமல் உள்ளது. அரசு அறிவித்தபடி அதனை அனைவருக்கும் வழங்க வேண்டும். வாகனம் புதுப்பித்தல், சாலைவரி, காப்பீடு, வங்கி தவணைகளை செலுத்த 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். தவணை தொகை செலுத்தாத காலத்திற்கு அபராத வட்டி விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிககைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் க.பீம்ராவ் தலைமையில், சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.அன்பழ கன், பொருளாளர் எஸ்.ஆனந்த், நிர்வாகி கண்ணன் ஆகியோர் போக்குவரத்து உதவி ஆணையர் மனோவை சந்தித்து மனு அளித்தனர்.