tamilnadu

img

ரூ70 லட்சம்  சீட்டு மோசடி - பாஜக நிர்வாகி கைது! 

சென்னை , மார்ச் 10-
ரூ70 லட்சம் சீட்டு மோசடி செய்த பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை செம்பியம் பகுதியில் சுவர்ணலட்சுமி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் வி.எஸ். சீனிவாசன். இவர் பெரம்பூர் பாஜக வர்த்தக அணி பிரிவு தலைவராகவும் தற்போது பாஜக வட சென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார்.
பொது மக்கள் கட்டிய சீட்டு பணத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் இருந்ததால் சீனிவாசன் நடத்தி வரக்கூடிய நிதி நிறுவனத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தை கேட்டு வந்தனர். இதனால், சீனிவாசன் தனது நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் சீனிவாசனை கைது செய்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க பிரமுகர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கனக துர்கா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.