தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வந்ததால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தமிழகத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை குறைக்க சமூக இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.