சென்னை:
தமிழகம் முழுவதும் வருவாய்உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிரப்புமாறு, தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ளவருவாய் உதவியாளர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அரசு சார்பில்தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பக்கூடிய இடங்களில் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் அதிகபட்சமாக சென்னையில் 31 இடங்களும், அடுத்தபடியாக வேலூரில் 25 இடங்களும், திருவண்ணாமலையில் 18 இடங்களும் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு குறித்த,அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதே போல் பதவி உயர்வின் மூலம் நிரப்பக்கூடிய இடங்களில், ஆயிரத்து 384 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் நடப்பாண்டில் காலியாக இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 167 இடங்களும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 109 இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தஇடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.