tamilnadu

img

மனித சங்கிலி....

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத் தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், பார் கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

கடலூரில் நடந்த இயக்கத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் புகழேந்தி, அய்யப்பன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தை கள் கட்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

சிதம்பரத்தில் புவனகிரி தொகுதி எம்எல்ஏ சரவணன், சிதம்பரம் நகரச் செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அறவாழி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், காவிரி டெல்டா கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் கலந்து கொண்டனர்.