tamilnadu

img

டேவிஸ் பூங்காவை சீரமைக்க கோரிக்கை

உதகை,ஜன.24- உதகையில் சிதிலமடைந்து பூட்டிக்கிடக்கும் டேவிஸ் பூங்காவை சீரமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே டேவிஸ் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா  கடந்த 2008 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இப்பூங்காவில் தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும்  ஏராளமானோர்   நடைபயிற்சி செய்து வந்தனர். மேலும் பூங்காவில் பசுமையான புல்வெளிகள் மற்றும் அடர்ந்து மரங்களுக்கு நடுவே நடைபாதை,   செடிகளால் ஆன நிழற்குடை, செயற்கை நீர்வீழ்ச்சி என அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டது. இப்பூங்காவினை தனியார் நிறுவனங்கள் பராமரித்து வந்தன.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவு  பராமரிப்புகள் இல்லாததால் புதர்கள் மண்டியும், சிதலம டைந்தும்  காணப்படுகிறது. மேலும் பூங்கா பூட்டியே கிடப்பதால் வேலிகள் உடைக்கப்பட்டு சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை சீரமைத்து முறையான பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.