சென்னை:
குடியரசு தினத்தையொட்டி, தமிழ் நாடு முழுவதும் 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.குடியரசு தினத்தன்று பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த காவல் துறை டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, ஜனவரி 26 அன்று தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 20 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப் பட்டுள்ளனர்.சென்னையின் முக்கிய இடங்களான விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம் பேடு, பிராட்வே பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வரும் வாகனங் களை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.மேலும், சென்னை காமராஜர் சாலையில் செவ்வாயன்று காலை 6 மணி முதல் குடியரசு தின விழா நடைபெறுவதால் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.