tamilnadu

img

குடியரசு தினம்:  பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவலர்கள் 

சென்னை:
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உட்படதமிழகம் முழுவதும் காவல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின் றனர். வழிபாட்டுத் தலங்கள்,வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஷிஃப்ட் முறையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சந்தேகத்துக்குரிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.