tamilnadu

img

நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து

நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாலை நேர தர்ணா போராட்டம்செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர்  பூங்குழலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.முகம்மது உசேன், நில அளவை ஒன்றிப்பின் மாநில செயலாளர் ஏ.பேபி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் வே.விக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.வசந்தகுமார் நன்றி கூறினார்.