சென்னை:
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும், தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும், வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்., வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம், மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது,இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.