tamilnadu

img

மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி, நவ.18- மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில்  ஆண்டுதோறும் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.  ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான  அறிவியல் கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார். இதில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ., ஜான்குமார், பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் கலந்து கொண்டனர். நவம்பர் 22 வரை நடைபெறும் கண்காட்சியில்  அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் நிலையான விவசாய செயல்முறைகள், சுகாதாரமும் உடல் நலமும், வள மேலாண்மை, தொழில்துறை வளர்ச்சி, வருங்கால போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கல்விசார் விளையாட்டுகள் மற்றும் கணித மாதிரிகள் ஆகிய துணைத் தலைப்புகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் 340 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.