tamilnadu

img

தேவனாம்பட்டினத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா தொடங்கி வைத்தார்

தேவனாம்பட்டினத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் 
ஆட்சியர் சிபி ஆதித்யா தொடங்கி வைத்தார்

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் குறுங்காடு வளர்ப்பு திட்ட தொடக்க விழா நடை பெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  விழாவில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, மரக்கன்று களை நட்டு வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், பல் உயிரின பெருக்கம் நடைபெறும். காடு செழித்தால் நாடு செழிக்கும், நாடு செழித்தால் உணவு உற்பத்தி சீரான வளர்ச்சி பெறும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் தாவரவியல் துறை தலைவர் நிர்மல் குமார், திட்ட அலுவலர் ஆனந்தராஜ், பேராசிரியர்கள் சிவகாம சுந்தரி, ஸ்ரீதேவி, தேவநாதன், ரவிக்குமார், சிவக்குமார், பாவாடை, மற்றும் மாண வர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் நட்டனர்.