பாலக்காடு, செப்.11- ஒன்றிய அரசுக்கு சொந்தமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் பொதுத் துறை நிறுவனத்தை வாங்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளன. அவை ஹைதரா பாத்தைச் சேர்ந்த மேகா இண்டஸ்ட் ரீஸ், மும்பையைச் சேர்ந்த கல்யாணி குழுமம், ரஷ்ய நிறுவனம் உட்பட டெண்டரில் 12 நிறுவனங்கள் பங்கேற் றன. ராணுவத்திற்கான வாகனங்கள் மற்றும் இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் மெட்ரோ ரயில் கோச்சு கள் தயாரிக்கும் பாதுகாப்பு அமைச்ச கத்தின் கீழ் உள்ள கேந்திரமான நிறு வனத்தை கையகப்படுத்தும் நிறுவ னங்கள் இந்தத் துறையுடன் தொடர்பு டையவை அல்ல. பிஇஎம்எல் நிறுவனத்தின் ரூ. 50,000 கோடி சொத்துகள் வெறும் ரூ. 2,000 கோடிக்கு விற்கப்படுகிறது. நிறு வனத்தில் உள்ள 54 சதவிகித ஒன்றிய அரசின் பங்குகளில் 26 சதவிகிதத்தை விற்று, நிர்வாக அதிகாரம் உட்பட தனி யார் கைக்கு மாற்றுவதுதான் டெண் டர். இதன்படி நிலம், இயந்திரங்கள், கட்டிடங்கள் கைமாற்றப்படும். இந் நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.1,855 என 1.10 கோடி பங்குகள் ரூ.2,000 கோடிக்கு விற்கப்பட்டன. கடந்த ஆண்டு ரூ.203 கோடி லாபத்துடன், ரூ.4,000 கோடி வருவாய் ஈட்டியது. ரூ.10,000 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்றுள்ள பிஇஎம்எல் நிறுவனம். இது விற்பனை செய்யப்படுவதன் மூலம், முக்கிய நகரங்களில் பிஇ எம்எல்க்கு சொந்தமான 3,675 ஏக்கர் நிலம் மேற்படி தனியார் நிறுவனங்க ளுக்கு சொந்தமாகும்.
நிறுவனங்களின் பின்னணி
ஹைதராபாத்தை தலைமையிட மாகக் கொண்ட மேகா இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் லிமிடெட் கட்டுமானம், குடி நீர், போக்குவரத்து மற்றும் மின்சா ரம் ஆகிய துறைகளில் செயல்படு கிறது. இந்த நிறுவனம் 18 ஆண்டு களுக்கு முன்பு 10 ஹெச்பி மோட்டார் சப்ளை செய்யத் தொடங்கியது. பிர தமரின் ஸ்வச் பாரத் அபியானுக்கு கார்ப்பரேட் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியுதவி அளித்ததே தகுதி நிலைக்கு பரிசீலிக்கப்பட்டது. மற்றொரு நிறுவனம் மும்பை யை தலைமையகமாகக் கொண்ட கல்யாணி குழுமம். இது 2010 இல் தொடங்கப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் குழுமம் ஆகும். தொழில்துறை நோக் கங்களுக்காக முன் தயாரிக்கப்பட்ட கட்டிடங்களை வழங்குதல், உள் துறை வேலைகளை மேற்கொள் வது, வணிக வளாகங்கள், அடுக்கு மாடிகளை நிர்மாணித்தல் மற்றும் வாடகைக்கு அல்லது விற்பனைக்கு வழங்குதல் ஆகியவை செயல்பாட் டுத் துறையாகும். இந்த இரண்டு நிறுவனங்களுக் கும் வாகன அல்லது எஃகு தொழில் பாரம்பரியம் இல்லை என்பது கவ னிக்கத்தக்கது.