சென்னை
விளையாட்டுத்துறையில் சாதிக்கும் இந்தியர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது முதன்மையானதாகும். அர்ஜுனா விருது 2-ஆம் நிலை விருதாகவும், துரோணாச்சார்யா விருது பயிற்சியாளர்களுக்கான விருதாகவும் உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டிற்கான விளையாட்டுத்துறை விருதுகள் இன்று மாலை (ஆக., - 21) அறிவிக்கப்பட்டுள்ளது. உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு முதன்முறையாக ஒரே நேரத்தில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாரா - ஒலிம்பிக் தடகள வீரரும், ரியோ பாரா ஒலிம்பிக் தொடரில் (உயரம் தாண்டுதலில்) தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன்,
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் - ரோஹித் சர்மா
டேபிள் டென்னிஸ் வீராங்கனை - மணிஹா பத்ரா
மல்யுத்த வீராங்கனை - வினேஷ் போகத்
ஹாக்கி வீராங்கனை - ராணி
ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா விருதிற்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா உள்ளிட்ட 27 பேருக்கும், துரோணாச்சார்யா விருதிற்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.