பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆம் ஆசிய இளையோர் விளையாட்டில் இந்தியா கபடி பிரிவில் அடுத்தடுத்து 2 தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சாண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"பஹ்ரைனில் நடைபெற்ற 3ஆம் ஆசிய இளையோர் விளையாட்டில் Boys, Girls கபடி பிரிவுகளில் இந்தியா தங்கம் வென்றது மகிழ்ச்சியான செய்தி.
பெண்கள் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, ஆண்கள் அணியில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் கலந்து சிறப்பித்தது தமிழ்நாட்டுக்கு பெருமை.
எளிய பின்புலத்தில் இருந்து உழைப்பால் சர்வதேச மேடையில் வெற்றி பெற்ற இவர்கள் அனைவரையும் சிபிஐ(எம்) பாராட்டுகிறது. இவர்கள் காட்டும் உழைப்பும் அர்ப்பணிப்பும் சமூக முன்னேற்றத்தின் உண்மையான அடையாளமாகும்.
இவ்வெற்றி உழைப்பாளி மக்களின் ஆற்றலுக்கு புதிய ஊக்கமாகட்டும். வீரர்கள், பயிற்சியாளர்கள், குடும்பங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
