நெய்வேலி நாணய சங்க பேரவையை கூட்ட வலியுறுத்தி செப்.29 போராட்டம்
கடலூர், செப்.24- நெய்வேலி நாணய சங்க பேரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வலியுறுத்தி செப்.29 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சிஐடியு முடிவு செய்துள்ளது. நெய்வேலி சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் எஸ்.திருஅரசு தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் டி.ஜெயராமன், பொதுச் செயலாளர் பி.பழனி வேல், பொருளாளர் எஸ்.வேலாயுதம், அலுவலக செயலாளர் ஜே.சாமுவேல், சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சொசைட்டி ஆண்டு பேரவை கூட்டத்தை உடனே நடத்தி பங்கு ஈவுத் தொகையை வழங்க வேண்டும், ஒருங்கிணைந்து ஊக்க ஊதியத்தில் 10 விழுக்காடு பாக்கி தொகையை உடனடி யாக வழங்க வேண்டும், உச்சவரம்பை அகற்றி வேண்டும், இன்கோ-காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு லாபத்தின் அடிப்படை யில் போனஸ் வழங்க வேண்டும். என். எஸ்.யு முதல் மந்தாரக்குப்பம் வரை நிலக்கரியை எடுத்து செல்லும் வாக னங்களுக்கு தனி பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.