தமிழக அரசில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அறிவிப்பு எண்.02/2022
பணி: Senior Lecturers
காலியிடங்கள்: 24
பணி: Lecturers
காலியிடங்கள்: 82
பணி: Junior Lecturers
காலியிடங்கள்: 49
சம்பளம்: மாதம் ரூ.36.400 - 1,15,700
தகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் போன்ற ஏதாவதொரு பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஒர் பாடத்தில் படித்திருக்க வேண்டும். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.07.2022 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுகான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.