அணுசக்தித்துறை செயலர் கே.என்.வியாசு தகவல்
செங்கல்பட்டு, நவ.11- அணு மின்உற்பத்தி மிகவும் பாதுகாப்பன முறை யில் உற்பத்தி செய்யப்படு கிறது. அதற்கு ஏற்ற வகை யில் அணு உலைகளை விஞ்ஞானிகள் பாது காப்பான முறையில் வடி வமைத்து வருகின்றனர் என அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அரசின் அணுசக்தித்துறை செயலாள ருமான முனைவர் கே.என்.வியாசு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் அறிவி யல் தொழில்நுட்ப நிறுவன த்தில் 15 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 9010 மாணவர்க ளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய அரசின் அணுசக்தித்துறை செயலாளர் முனைவர் கே.என். வியாசுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ப்பட்டது. பின்னர் அவர் பேசியதாவது:- 1876 ஆம் ஆண்டில் அணுசக்தி கண்டுபிடிக்க ப்பட்டது. அணுசக்தி மூலம் மின்உற்பத்தி செய்வது அபாயகரமானது கதிர்வீச்சு ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது. இது தவறானது. அணு மின்உற்பத்தி மிகவும் பாது காப்பன முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அணு உலை களை விஞ்ஞானிகள் பாது காப்பான முறையில் வடிவமைத்து வருகின்றனர். அனல் மின் உற்பத்தி மாசு ஏற்படுத்தக் கூடியது. ஆனால் அணு மின் உற்பத்தி மாசு இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. உயிர் காக்கும் மருந்து மாத்திரைகள் ஊசிகள் தயாரிக்க தேவையான ஆராய்ச்சிகளை அணுசக்தி துறை மேற்கொண்டு வரு கிறது. பட்டம் பெறும் மாண வர்கள் முழு ஆற்றலையும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி ஏ.ராஜராஜன் பேசுகையில், ‘aவிண்வெளி துறைக்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறு வனத்திற்கும் நல்ல தொடர்பு உள்ளது. இந்நிறுவனத்தின் மாணவர்கள் பெங்களூர் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் நல்ல நிலையில் இயங்கி வரு கிறது. பட்டம் பெற்ற நீங்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்க ளாக தொழில் முயல்வோ ராக உருவாக வேண்டும், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்ற லட்சியம் உங்களிடம் இருக்க வேண்டும்’ என்றார்.