சென்னை:
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை நவம்பர் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
ரூ.2,363 கோடி நிதி
ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.கடந்தமுறையைப் போலவே, இம்முறையும், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.தற்போது, சர்க்கரை பெறும் குடும்ப அட்டை தாரர்கள், அரிசியையும் பெறுவதற்காக விண்ணப்பித்து வருவதால், பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவோரின் எண் ணிக்கை 2 கோடிக்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதனை கணக்கிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தனது அரசாணையில் தெரிவித்திருக்கிறது.