tamilnadu

img

பொங்கல் பரிசாக வழங்கவிருந்த கரும்புகள் காய்ந்து நாசம்

செங்கல்பட்டு, ஜன. 7- பொங்கல் பரிசாக வழங்க இருந்த கரும்புகள் அரசு அலுவலர்களின் அலட்சி யத்தால் காய்ந்து நாசமாகின தமிழக மக்கள் பொங்கலை கொண்டா டும் வகையில் தமிழக அரசின் சார்பில்  பரிசுத் தொகை ரூபாய் ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5  கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்புத்  துண்டு  ஆகியவை வழங்கப்பட்டு வரு கின்றது. இதற்கான செலவினங்க ளுக்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூபாய் 42.67 கோடியை மாநில அரசு  ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் செங் கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சத்து, 71ஆயி ரத்து, 33 குடும்ப அட்டைதாரர்கள் பயன டையவுள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு சுற்றுவட்டார கிராமங்களில் செயல்படும் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பு வதற்கான கரும்புகளை கூட்டுறவுத்துறை  கடந்த சில நாட்களுக்கு முன் கொள்  முதல் செய்து செங்கல்பட்டு புதிய  பேருந்து நிலையம் அருகில் உள்ள  கூட்டுறவுக்கு சொந்தமான குடோனில்  பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைத்திருந்தனர். அவ்வாறு கொள் முதல் செய்யப்பட்ட கரும்புகள் அனைத்  தும் சரியான முறையில் பாது காக்கப்படாததால் காய்ந்தும், அழுகி யும் உள்ளது. இந்த கரும்புகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. குடோனில் காய்ந்துள்ள கரும்பு களைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் தற்போது புதிய கரும்புகளைக் கொள்முதல் செய்து அந்த கரும்புடன் காய்ந்த கரும்புகளையும் கடைகளுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் இதுகுறித்து கூட்டுறவு ஊழியர்களிடம் கேட்டபோது அரசு உள்ளாட்சித் தேர்தல்  நடத்துவதற்கு முன்பாகவே இதற்கான  பணத்தை ஒதுக்கிவிட்டது. அலுவ லர்களும் கரும்பைக் கொள்முதல் செய்து விட்டனர். அவை அனைத்தும் தற்போது  காய்ந்துள்ளது. புதிய கரும்பு கொள்முதல் செய்து அதனுடன் சேர்த்து அனுப்பும் பணி நடைபெற்றுவருகின்றது. இதனால் நியாய விலைக் கடைக்கார ருக்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற  வாக்குவாதங்கள் ஏற்படும் இதனால்  அடிமட்ட ஊழியர்களே பாதிக்கப்படு வார்கள் எனத் தெரிவித்தனர்.