tamilnadu

img

சாம்சங்’ தொழிலாளர் ஆதரவுப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கைது

சென்னை, அக். 5 - ‘சாம்சங்’ தொழிலாளர் பிரச்ச னையில் தமிழக முதல்வர் தலை யிட்டு தீர்வுகாண வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், சிபிஎம்  மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செய லாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை வலுக் கட்டாயமாக கைது செய்தனர்.

இதனால், ஆவேசமடைந்த இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், “அடிப்படை உரிமைக்கான போரா ட்டத்தை ஒருபோதும் அடக்கு முறையால் ஒடுக்கிவிட முடியாது”  என காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரத்தில் செயல்படும் ‘சாம்  சங் இந்தியா’ நிறுவனத் தொழிலா ளர்கள், தங்களின் தொழிற்சங்க உரி மைக்காக 25 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட் டம் நடத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறையும், தொழிலாளர் துறையும், சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண் டிருக்கின்றன.

இந்நிலையில், சாம்சங் தொழி லாளர் சங்கத்தை பதிவு செய்ய  மறுக்கும் அரசின் நிலைப்பாட்டை மாற்றிடவும், தொழிலாளர்கள் விரும்பும் சங்கத்துடன் பேச்சு வார்த்தையை நடத்தி சாம்சங் நிறு வனமானது, தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும்- இந்தப் பிரச்ச னையில் தமிழ்நாடு முதலமைச்சர்  தலையிட வலியுறுத்தி சனிக்கிழ மையன்று (அக்.5) சென்னை ராஜ ரத்தினம் மைதானம் அருகே கண்  டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய  இடதுசாரிக் கட்சிகள் சார்பில்  போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்த நிலை யில், காவல்துறையினர் அனுமதி  மறுத்ததையும் மீறி, சனிக்கிழமை யன்று ஏராளமானோர் போராட் டக்களத்திற்கு வந்தனர். ஆனால்,  கொடிகள் கட்டவும், நாற்காலிகள்  போடவும் விடாமல் காவல்துறையி னர் தடுத்தனர். அத்துடன் போராட் டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதனால், இடதுசாரிக் கட்சி களின் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டமாக மாறியது. போலீசா ருக்கும் இடதுசாரிக் கட்சித் தொண்  டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது  போராட்டத்தில் பங்கேற்றவர் களை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தில் சிபிஎம்  மாநிலச் செயற்குழு உறுப்பினர் கள் க. கனகராஜ், ஜி. சுகுமாறன்,  எஸ். கண்ணன், கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஜி. செல்வா (மத்திய சென்னை), ஆர். வேல்முருகன் (தென் சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ. பாக்கியம், எம்.  ராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் பா. கருணாநிதி (மத்திய சென்னை), எஸ்.கே. சிவா  (தென் சென்னை), சிபிஐ (எம்எல்)லிபரேசன் மாவட்டச் செயலாளர் இரணியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.