சென்னை
கொரோனாவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள தமிழ்நாட்டில் தில்லியைப் போல பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த (சென்னையில்) பேட்டியில்,"கொரோனாவுக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.
பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவால் குணமடைந்த நபரின் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என 3 வகையான அணுக்கள் உள்ளன. இதுபோக திரவநிலையில் பிளாஸ்மா செல்களை பிரித்து புதிதாக வரும் கொரோனா நோயாளிகளின் உடலில் அந்த ரத்த அணுக்களை செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறை தான் பிளாஸ்மா என அழைக்கப்படும்.