புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் பெருமாள் தலைமையில் வெள்ளியன்று (அக். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாலை போக்குவரத்து மாநிலப் பொருளாளர் வி குப்புசாமி, மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன், தலைவர் கரிமுல்லா, விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் அப்சல்அகமத், சிஐடியூ நிர்வாகி சம்மந்தம், மாவட்ட துணைத் தலைவர் தீனா, பொருளாளர் தயாளன், வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.