tamilnadu

கட்சி முடிவுகளை வெளியில் பேசக்கூடாது: அதிமுக தலைமை

 சென்னை,ஜூன் 9- அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 12 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டச் செய லாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச் சர்கள், மாவட்டச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.  கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவ ருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டி ருப்பதாகவும், தங்களுக்குரிய அழைப்பிழதோடு, தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் முடிவுகள் குறித்து நிர்வாகி கள், தொண்டர்கள் பொது வெளியில் பேசக் கூடாது. கருத்துகள் கூற விரும்பினால், செயற்குழு, பொதுக்குழுவில் தெரிவிக்கலாம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக செயல்பாடு  குறித்து சிலர் கூறிவரும் கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.