tamilnadu

img

விருப்ப ஓய்வு பெறும் 11 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்

சென்னை:
தமிழகத்தில் 11 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதால் விருப்பஓய்வுத் திட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்படி 79 ஆயிரம்பேர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தனர்.தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுபெற கடிதம் கொடுத்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வுபெறலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து பலர்இந்த முடிவுக்கு வந்துள்ளனர். வருகிற 31 ஆம் தேதி அனைவரும் விருப்ப ஓய்வு பெறுகின்ற நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதால் அங்கு பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள் ளது.சென்னையில் மட்டும் 2,600 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல். சென்னை வட்டத்தில் 42 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. இங்கு 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு வட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.வாடிக்கையாளர் சேவைமையம், பழுது பார்க்கும்
பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் செல் போன், டெலிபோன் கட்டணம் வசூல், சிம்கார்டு விற் பனை உள்ளிட்ட சேவைகள் இனி முழுமையாக தனியாரிடம் கொடுக்கப்பட உள்ளது.இந்த பணி கொடுப்பதற்கு எப்படியும் ஒரு மாத காலமாகும். அதுவரையில் சேவை பாதிக்கும் என்று தெரிகிறது.'