tamilnadu

img

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...

சென்னை:
ஐந்து மாதங்களுக்குப் பின் தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி மையங்கள் திங்கட்கிழமை (ஆக.10) காலை முதல் திறக்கப் பட்டன.தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதன் எதி ரொலியாக, ஐந்து மாதங்களுக்குப் பின் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள் ளன. அங்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது.

அதன்படி, மையங்களில் உள்ள உடற் பயிற்சி இயந்திரங்கள், வலுதூக்கும் சாதனங்கள், கைப்பிடிகள் போன்றவைகிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டன. தனியார் உடற்பயிற்சி மையங்களுக்கு வந்தவர்கள், சானிடைசரால் கைகளை  சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.உடல் வெப்பநிலை பரிசோதனைபயிற்சி மேற்கொள்வோரின் உடல் வெப்பநிலை, உடலில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவையும் பரிசோதிக்கப் பட்டன. பயிற்சியின்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. உடற்பயிற்சியில் ஈடுபடும் முன் உடலின் ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்டது.

சிறிய கோவில்களும் திறப்புதமிழகத்தில் ஊரடங்கில் மேலும் ஒரு தளர்வாக, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், மாநகராட்சிகளில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள வழிபாட்டுத் தலங்களை ஆக.10 முதல் திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் உள்ள சிறிய கோவில்கள் திங்களன்று  திறக்கப்பட்டன.  கோவில்கள் தூய்மைப்ப டுத்தப்பட்டு, பக்தர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.