tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக் கோரி கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி,  துணைத்தலைவர் எம்.சுப்பராயன்,  கிளை தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில்  ஊராட்சி எழுத்தர் ராஜாவிடம் மனு அளித்தனர்.