tamilnadu

விகடன் பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெறுக சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,டிச. 31-  விகடன் பத்திரிகை யாளர்கள் மீதான வழக்கு களை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று  சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (எம்யூ.ஜெ) வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ஆர்.சங்கர், பொருளாளர் மணிமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் இருந்தே, இந்தியாவில் இருக்கும் இலங்கைத்தமிழ் அகதிகளின் நிலை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 27-12-2019 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்க ளில் உள்ள தமிழர்களின் கருத்துகளை சேகரிப்ப தற்காக ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக் கலைஞர் ராம்குமார் ஆகிய இருவர் சென்றனர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் மார்த்தண்டம், களியக்காவிளை காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ள்ளது. தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 19 (1) (a) வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு எதி ராக இருக்கிறது. இது போன்ற வழக்குகளில் பத்திரி கையாளர்களுக்கு ஆதர வாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியி ருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏள இந்திய  அரசு (1985) வழக்கில், ஜனநா யக எந்திரம் இயங்குவதில் பத்திரிகைகள் முக்கிய வகிப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசின் நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களின் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்காமல் பாதுகாப்பது தங்களின் கடமை என்றும் உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளின் கருத்துகளை சேகரிப்பதும் அதனை வெளிப்படுத்துவதும் ஊட கங்களின் கடமையாகும். இதனைப் பறிக்கும் வகை யில், பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்ப தற்கு சென்னைப் பத்திரிகை யாளர் சங்கம் (எம்யுஜெ) கடும் கண்டனம் தெரி வித்துக்கொள்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரத்துக்கும், உச்சநீதிமன்றம் உயர்த்திப்பிடித்த பத்திரிகை சுதந்திரத்துக்கும் எதிரான இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். பத்திரி கையாளர்களை அச்சு றுத்தும் வகையில் போட ப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என சென்னைப் பத்திரிகை யாளர் சங்கம்  வலியுறுத்து கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.