tamilnadu

img

பெண் என்பதால் அதிகாரிகள் மதிப்பதில்லை கடலூர் மேயர் சுந்தரிராஜா குற்றச்சாட்டு

பெண் என்பதால் அதிகாரிகள் மதிப்பதில்லை 
கடலூர் மேயர் சுந்தரிராஜா குற்றச்சாட்டு

பெண் மேயர் என்பதால் என்னை அதிகாரிகள் மதிப்பது கிடையாது என்று கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது மேயர் சுந்தரி ராஜா குற்றம் சாட்டினார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதிய கடைகள் கட்டுவதற்கு  ரூ.2.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திங்களன்று (மார்ச் 10) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன்,  ஒப்பந்ததாரர் மட்டும் வந்திருந்தனர்.  மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் உரையாற்றிய மேயர், மக்கள் பயன்படும் வகையில் தொடர்ந்து தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகி றோம். அதேபோல், இந்த பணியும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதால், இந்த பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதாக தெரி வித்தார். அதன்பிறகு, மாநகராட்சி உதவி பொறியாளர் பாரதி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, உதவி பொறி யாளர் பாரதியிடம் மேயர் சுந்தரி ராஜா சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும்,தொடர்ச்சியாக  ஐந்து நிகழ்ச்சி களுக்கு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவில்லை என்றும் கடுமையாக சாடி னார். நான் பெண் மேயர் என்பதால், நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி புறக்கணிக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.