tamilnadu

img

நாசகரக் கல்விக் கொள்கையின் நகலை எரித்து மாணவர்கள் போராட்டம்

சென்னை, ஜுன் 25- கல்வியை கார்ப்பரேட் முத லாளிகளுக்கும், காவிகொள்கைக் கும் தாரை வார்த்திட மத்திய அரசு ‘‘வரைவு தேசிய கல்வி கொள்கை அறிக்கை 2019’’ என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இது இந்திய தேசத்தின் மாநில உரிமைகளையும், மொழி உரிமையையும், கல்வி பெறும் உரிமையையும் பறித்து மத்தியதுவப்படுத்துகின்ற நட வடிக்கையாகவும், கல்வியை முழு வதும் வியாபாரமாக்கி மதவாத கருத்துக்களுடன் திணித்திட கொண்டுவந்துள்ள அறிக்கை யாகும். இதற்கு எதிராக இந்திய மாண வர் சங்க மத்தியக் குழு தேசம் முழு வதும் உள்ள கல்வி வளாகங்களில் 25ம் தேதி இக்கல்விக் கொள்கை யின் நகல் அறிக்கையை எரித்து எதிர்ப்பு தெரிவித்திட அறைகூவல் விடுத்திருந்தது.  அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செவ்வாயன்று நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.  தஞ்சை சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் தலைமையில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.  இதில் தஞ்சை மாவட்டச் செய லாளர் அரவிந்தசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரி யில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார்.  இதில் மாவட்டத் தலைவர் பதில் சிங், மாவட்ட துணை தலைவர் சச்சின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் க.நிருபன் சக்கர வர்த்தி தலைமை வகித்தார்.  இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் தௌ.சம்சீர் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் பிர வீன், மாவட்ட நிர்வாகி சஞ்சய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுர்ஜித் மற்றும் நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்.  நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார் மற்றும் நிர்வாகிகள் பெரும்திரளாக பங்கேற்றனர். தென் சென்னை மாவட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட செய லாளர் தீ.சந்துரு தலைமை வகித் தார். மாநில துணைச் செயலாளர் இசக்கி நாகராஜ் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் சுபாஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் ஆர். வி.ஜி கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சுந்தர் தலைமை வகித் தார். பகத்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்ட த்தில் மாவட்ட செயலாளர் கவின் ராஜ் தலைமை வகித்தார் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பங் கேற்றனர்.  கோவை மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத் தில் மாவட்டத் தலைவர் தினேஷ் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அசார், வினித் உள்ளிட் டோர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத் தில் மாவட்ட துணைத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தேன்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் முகேஷ் தலைமை வகித்தார். திருச்சி காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துளசி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவ ட்டச் செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ஓவியா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை மாநகர் எம்.கே.யு கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்  தில் மாவட்ட செயலாளர் வேல் தேவா தலைமை வகித்தார். நிர்வாகி கள் பங்கேற்றனர். மதுரை புறநகர் மாவட்ட தலைவர் பிருந்தா தலைமை யில் ஜெயராஜ் மேல்நிலைப் பள்ளியில் போராட்டம் நடை பெற்றது. தேனி மாவட்டத்தில் ஆண்டி பட்டி அரசு கலைக்கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் நாகராஜ் தலைமை வகிக்க மாவட்ட தலைவர் பிரேம் குமார், மாவட்ட நிர்வாகிகள் செல்வேந்திரன், நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  சிவகங்கை மாவட்டம் மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட செய லாளர் இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் கியூபா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விருது நகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி அரசுப்பள்ளியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜோதிஸ்வரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திரு நெல்வேலி மனோ கல்லூரியில் மாவட்ட துணைச் செயலாளர் சுபாஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.