தடுக்க வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளை மாநில அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
மாநில ஆலோசனைக் குழு
கல்வி உரிமைச் சட்டம், 2009ன்படி ஒவ்வொருமாநில அரசும் கல்வி உரிமைச் சட்டத்தின் விதி களை முறையாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவதற்காக மாநில ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். குழுவில் 15க்கு மேற்படாமல் ஆரம்பக் கல்வி மற்றும் குழந்தை வளர்ப்புத் த்துறை வல்லுநர்கள் சேர்க்கப்பட வேண்டும். தமிழக அரசு அத்தகைய ஆலோசனைக் குழுவை இதுவரை நியமிக்கவில்லை. மாநில ஆலோசனைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அபாயகரமான கல்விக் கொள்கை
தேசியக் கல்விக் கொள்கை 2019 பல அபாயகரமான அம்சங்களைக் கொண்டிருக் கிறது. இதில் கருத்துக்கூற காலக்கெடுவை 6 மாதங்களாக நீட்டிக்கவும், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அறிக்கை குறித்த முடிவெடுக்க அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களும் கூடும் மாநாடு இம்மாதம் 22ஆம் தேதி
தில்லியில் கூடுவதாக அறிவிக்கப்பட்டிருக் கிறது. மேற்சொன்ன இரண்டையும் செய்யாமல் மாநாட்டைக் கூட்டுவது பொருளற்றது என்பதைமாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி, மாநாட்டை ரத்து செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு பேசி,அவர்களையும் இதே நிலையில் ஒருங்கிணைக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, இந்த தேசியக் கொள்கை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால் மாநில அரசுகள் கல்வியில் அனைத்து அதிகாரங்களையும் இழக்கும். கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாறும் நிலை ஏற்படும்.
இதை அனுமதிக்கப் போகிறோமா?
இன்று நீட் கூடாது என்று போராடி தோற்று விட்டோம். இனி மருத்துவக் கல்விக்கு மட்டுமல்ல அனைத்து உயர் கல்விக்கும், அனைத்து இளநிலை வகுப்புகளுக்கும் மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள் தேவையற்றவையாகி, மத்திய அரசு நடத்தும் தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) மூலம்தான் சேர்க்கை நடைபெறும். இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? உயர் கல்வி முழுமையாக மத்திய அரசின் கைக்கு மாறும். பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் அனைத்தும் மத்திய நிறுவனங்களின் விதிமுறைகள் படி நடக்கும். புதிய தேசியக் கல்வி கொள்கை அமலுக்கு வந்தால் உலகில் எங்கும்
இல்லாத வகையில் மத்திய அரசின் கையில் அதிகாரக் குவிப்பு இருக்கும். எனவே மாநில அரசு இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.