tamilnadu

img

இடஒதுக்கீடுக்குக் காலக்கெடு விதிக்க முடியாது... கி.வீரமணி....

சென்னை:
இடஒதுக்கீடுக்குக் காலகெடு விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக் கின்மீது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் - இடஒதுக்கீடுக்குக் காலகெடு விதிக்க முடியாது என்று கூறியுள்ளது  வரவேற்கத் தக்கது, சட்டப்படியானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக் கையில்,“ உச்சநீதிமன்றத் தில் இடஒதுக்கீட்டுக்கு காலகெடு நிர்ணயம் செய்து அறிவிக்கக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன் றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு தெளிவான கருத்தை அறிவித்திருக்கிறார்கள். இப்படி மனுதாரர் கோரியுள்ள வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் முன்னர் கூறியுள்ளதை எடுத்துக் காட்டியதுபற்றிக் குறிப்பிடுகையில் “அது அவரது கருத்தே தவிர, ஆணையோ, தீர்ப்போ அல்ல” என்றும் தெளிவுபடுத்தி யிருக்கிறார் கள்” என்று கூறியுள்ளார்.

இரு வகையான இடஒதுக்கீடு
இந்த இடஒதுக்கீடுபற்றி இப்படிப்பட்ட ஒரு குழப்பம் அல்லது குதர்க்கம் அடிக்கடி தலைதூக்குகின்றது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள இடஒதுக்கீடு - தொகுதிகள் ஒரே வகையானது அல்ல என்பதைப் புரியாமல் பேசுவதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஒன்று, கல்வி - வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடு மற்றொன்று, அரசியல் தேர்தல் ரீதியான - இடஒதுக்கீடு. அதாவது, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் எஸ்சிகளுக்ககான பிரதிநிதித்துவம் பெற வழி வகை செய்யும் இட ஒதுக்கீட்டிற் காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.சமூகநீதி கண்ணோட் டத்திலும், ஜனநாயகம் என்பதிலும் இடஒதுக்கீடு என்பது சில இடங்களை ஒடுக்கப் பட்ட மக்களுக்குக் கொடுத்தது போதும் என்று நினைக் காமல், மக்கள் தொகையின் ஒரு பகுதியான அதிகாரப் பங்களிப்புக்கு உரியவர்கள் என்பதை நிலை நாட்டவே ஆகும். இடஒதுக்கீடு அளவு பற்றியெல்லாம் முடிவு செய்யும் உரிமை, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசுகளின் தனி உரிமையாகும். நடைமுறைகளின் படியும், அது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில,ஒன்றிய அரசுகளுக்கே உரியது.நீதிமன்றங்கள், சட்டப் படி சரியாக வழங்கப்பட்டிருக்கிறதா? சட்டம் சரியாக அமலாக்கப்பட்டிருக்கிறதா? என்றுதான் கூற முடியும் என்பது உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளிலேயே வலியுறுத்தப்பட்டு வழங் கப்பட்ட விளக்கம்தான். இது மாநிலத்திற்கு மாநிலம் பல்வேறு கலாச்சாரம், மொழி, கல்வி வாய்ப்புக்கள், வளர்ச்சி இவற்றின் அளவுகோலைப் பொறுத்ததே எனவும் வீரமணி தெரிவித்துள்ளார்.