tamilnadu

img

நாளை பேருந்துகள் ஓடாது: முதல்வர் அறிவிப்பு

சென்னை;
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 22 ஞாயிறன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைவரும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து அரசு, தனியார் நூலகங்கள்  மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும்.  மிகவும் அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களை முதல்வர்  கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் நரேந்திரமோடி வியாழனன்று அறிவித்த 9 அம்ச நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மக்கள் அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மார்ச் 22 (நாளை) தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல்இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.