நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் 13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல், அதி தீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதியில் புதுச்சேரி அருகில் புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி 75 சதவிகிதம் நிரம்பி உள்ள நிலையில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி இன்று செம்பரம்பாக்கம் அணை பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது,
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை வழங்கப்படுகிறது.