வீனஸ் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை
சிதம்பரத்தில் உள்ள வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை(அக்.2) விஜயதசமியை முன்னிட்டு, நுழைவு நிலை வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது. இப் பள்ளியின் தாளாளர் எஸ். குமார், இணை தாளாளர் ரூபியால் ராணி ஆகியோர் முன்னிலையில் நெல்லில் “அ” என எழுதி கல்வியின் முதல் படியைத் துவங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் அருண், தலைமை நிர்வாகி லியோனா அருண், முதல்வர் எஸ்.லியோ பெஸ்கி ராவ் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.