tamilnadu

img

தேசிய பேரிடர் நிதி - தமிழ்நாட்டுக்கு மீண்டும் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு!

சென்னை,பிப்.19- இந்த முறையும் தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது.
ஒன்றிய அரசு விடுவித்த 2024-2025ஆம்  ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டுக்கு இந்த முறையும் நிதி ஒதுக்கப்படவில்லை
ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு ரூ.37,906 கோடி நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது ஆனால் 2024இல் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.