tamilnadu

img

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர் சங்கரய்யா....

இந்திய விடுதலைப் போராட்டம் உட்பட மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்ற திரு.என்.சங்கரய்யா அவர்கள் 15.07.2021 அன்று தனது நூறாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வினையொட்டி விழா மலர் வெளியிடப் போவதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற மாபெரும் இயக்கத்தைக் தொடங்கியவர்களில் திரு.என்.சங்கரய்யா அவர்களும் ஒருவர். பொதுவுடைமை இயக்கத்தின் தத்துவ இதழான ‘ஜன சக்தி ’ மாதஇதழின் முதல் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘தீக்கதிர்’ நாளிதழின் ஆசிரியராகவும் இருந்து, கம்யூனிச சித்தாந்தங்களை தனது எழுத்தின் மூலம் மக்களிடம் சென்றடையச்செய்தவர் திரு.சங்கரய்யாஅவர்கள். இந்திய நாட்டிற்காக, தமிழ்நாட்டிற்காக, தமிழக மக்களுக்காக தன்வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் திரு.சங்கரய்யாஅவர்கள். மூன்று முறைதமிழ்நாடு சட்டமன்றஉறுப்பினராக பணியாற்றியவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான திரு.சங்கரய்யா அவர்கள் சாதி மறுப்புதிருமணங்கள், தீண்டாமை ஒழித்தல், தொழிலாளர் உரிமை,ஆணவக் கொலை தடுப்புஆகியவற்றிற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். தன்னுடைய தியாகத்தால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து,நூறாவது அகவையில் அடியெடுத்து வைக்கவிருக்கும் திரு.சங்கரய்யா அவர்களுக்கு எனது மரியாதையையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது நூறாவது பிறந்த நாள் விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற என்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  திரு.சங்கரய்யா அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி வெளியிடவிருக்கும் விழா மலர் மூலம் பொதுவுடைமைக்கருத்துக்கள் மக்களை சென்றடையவேண்டும் என்ற என்னுடைய அவாவினையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

 ஓ.பன்னீர் செல்வம், ஒருங்கிணைப்பாளர், அஇஅதிமுக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்