tamilnadu

img

மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்... சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்

சென்னை:
தமிழகத்தில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு வியாழனன்று(ஜன.9) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலுரையின் சுருக்கம் வருமாறு:-வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் வாயிலாக நடப்பு நிதியாண்டில், 31.12.2019 வரை சுமார் 9 லட்சம் குறு,சிறு விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.ஆழ்கடல் மற்றும் அண்மைக் கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு 25,000 கருவிகள், 160 செயற்கைக்கோள் கருவிகள், இந்தியவானிலை ஆராய்ச்சி மையம் மூலம் 507 டிரான்ஸ்பான்டர் கருவிகள் மற்றும் 200 நாவிக்வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்துமீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்சனை!
தமிழ்நாடு-கேரளா மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம்,பாண்டியாறு-புன்னம்புழா, செண்பக வள்ளி, நெய்யாறு என பல்வேறு பிரச்சனைகள்இருந்து வருகிறது. இரு மாநிலங்களிடையே நிலவும் தண்ணீர் பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும்.

ஓய்வூதியம்
அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது.தகுதி வாய்ந்த நபர்கள் மனு செய்ததால் முதியோர் ஓய்வூதியம் 5 லட்சம் பேருக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்பு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

‘தமிழ் நெட்’
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகரப் பகுதிகளிலும் அதிகவேக இணையதள வசதி கிடைக்க ‘தமிழ் நெட்’ திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டம் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

உலகத் தரத்திற்கு வண்டலூர்
வண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சர்வதேசஅளவுக்கு தரம் உயர்த்தப்படும். திருவொற்றியூர், தரங்கம்பாடி மற்றும் கடலூரில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க மத்திய அரசுடன் 420கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

வேளாண் பரப்பு அதிகரிப்பு
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு இதேநாளில் 85 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் எனஇருந்த வேளாண் பயிர் சாகுபடி பரப்பு, இந்தஆண்டில் இதுவரை 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக,அதாவது 97 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கரில்வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தாண்டு, தமிழ்நாடு உணவுதானிய உற்பத்தியில் ஒரு புதிய மைல் கல்லாகும்.சென்னை மாநகரில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுத்திட ரூ. 2,371 கோடியில் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.இவ்வாறு முதல்வர் பேசினார்.