tamilnadu

மோடி பதவி ஏற்பு விழா:  திமுக எம்.பி.க்கள் புறக்கணிப்பு

சென்னை,மே 30-சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு முறையான அழைப்பு வராததால் மோடி பதவி ஏற்பு விழாவை திமுக எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.