சென்னை:
நாடு விடுதலைக்குப் பிறகு 1952 ஆம் ஆண்டு முதல் மாகாண (மாநிலம்) தேர்தல் நடைபெற்றாலும் 1956ஆம் ஆண்டு தான் சென்னை மாநில முதலாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.
சென்னை மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைகளில் சி.ராஜகோபாலன் (ராஜாஜி), கு.காமராஜ், எம்.பக்தவச்சலம், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, வி.ஆர்.நெடுஞ்செழியன், எம்.ஜி.ராமச்சந்திரன், ஜானகி,ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமிஆகியோர் வரிசையில் மு.க. ஸ்டாலின் தமிழ் நாட்டின் 13ஆவது முதலமைச்சராக வெள்ளியன்று (மே 7) பதவியேற்றார்.