சென்னை:
மேகதாது மற்றும் மார்க் கண்டேய அணை குறித்து மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் துரைமுருகன் தில்லிக்கு சென்றார்.
கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளது. காவிரி நீர் பிரச்சனை இருக்கும் போதே கர்நாடகா தனது அத்துமீறலைத் தொடர்ந்து செய்து வருகிறது.காவிரி நீர்ப்பாதையில் மேகதாது அணை கட்டுவது தற்போது பெங்களூருவுக்குத் தண்ணீர் தேவை என்பதற்காக அணை கட்டுவது எனப் பல அத்துமீறும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்துத் தமிழகம் பல முறை ஒன்றிய அரசிடம் முறையிட்டும் அதற்கான தீர்வு வரவில்லை.
இந்நிலையில், மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘’மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது. இதனால் தமிழகம், கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் பயன் உண்டு. மேகதாது குறித்து இரு மாநிலப் பிரதிநிதிக ளும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம்’’ என எடியூரப்பா தெரிவித்திருந்தார்.இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள பதில் கடிதம் மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு சார் பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.இந்தப் பேச்சுவார்த்தையில் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தவுள்ளார். தென் பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர் நாடகம் அணை கட்டியது குறித் தும் தமிழகத்தின் ஆட்சேபணையை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.