குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், நகர செயலாளர் சி. சங்கர், வி.சி.க மண்டலச் செயலாளர் விடுதலை செழியன், மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ், சிபிஐ நகர செயலாளர் கமலநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.