சென்னை:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ரயில் பயணிகள் அனைவரும் தேவையை ஒட்டி மட்டுமே பயணிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகனேசன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு:
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றடைய இந்திய ரயில்வே நாடு முழுக்க தினந் தோறும் ஷ்ரமிக் ஸ்பெஷல் எனும் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது.இந்த சேவையை உபயோகிக்கும் சில பயணிகளுக்கு ஏற்கனவே சில ஆரோக்கிய குறைபாடுகள் இருப்பதாக காணப்பட்டது.இது கோவிட்-19 ன் தொற்று காலத்தில் அபாயத்தை மேலும் மோசமடைய செய்கிறது. இந்த ஆரோக்கிய குறைபாடுகளால் சில துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகள் பயணத்தின் போது நேர்ந்துள்ளன.இதை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகத்தின் மே 17 ஆம் தேதி உத்தரவின்படி, பாதிக்கப்படக்கூடிய பயணிகள் - அதாவது இணை நோயுற்ற தன்மையுடையவர்கள் (உதாரணத்திற்கு உயர் ரத்த அழுத்தம் , நீரிழிவு, இருதய நோய் , புற்று நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள்) மற்றும் கர்ப்பிணி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 65 வயதுக்கு மேற் பட்டவர்கள் மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் இது போன்ற பயணத்தை தவிர்க்கலாம்.ரயில்வே ஊழியர் குடும்பத்தினர், பயண தேவை உள்ள அனைத்து குடிமக்களுக்காகவும் ரயில் சேவை 24 மணி நேரமும் கிடைக்க உழைத்து கொண்டிருக் கிறது. ஆனால் பயணிக ளின் பாதுகாப்பு தான் எங்களுடைய முக்கிய நோக்கம். ஆகவே, இந்த வேண்டு கோளுக்கு ஒத்துழைக்கு மாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.பயணத்தின் போது அவசரத்திற்கும் உதவி எண்கள் 139, 138 மூலம் உங்களுக்கு உதவ இந்திய ரயில்வே குடும்பம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.