tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழகிடுக

விழுப்புரம், ஜூன் 15- மேல்மலையனூர் ஊராட்சியில் உள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை  கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாபோர் உரிமைக்கான நல  சங்கத்தின் சார்பில் வட்டச் செயலாளர் ஏழு மலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் வட்டார  வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மாவட்டச் செய லாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் டி.முருகன், சங்கத்தின் வட்டத்  தலைவர் ஷெரிப் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் மேல்மலையனூரில் 5 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி  விட்டனர். மீதமுள்ள 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பியவுடன் வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர்.