tamilnadu

சென்னை மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஊழியர் பலி

சென்னை, ஜன. 3- சென்னை அண்ணா நகர் 3ஆவது அவென்யூவில் தனியார் உணவகம் உள்ளது. இங்கு திருநெல்வேலியை சேர்ந்த வெனிட் சகாயம் (26) உட்பட 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வெனிட் சகாயம் உட்பட ஊழியர்கள் உணவகத்தில் இருந்தனர். அந்த ஓட்டலின் ஒரு அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ மளமளவென உணவகம் முழுவதும் பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெ.ஜெ. நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் யாரேனும் உள்ளே சிக்கியிருக்கிறார்களா என சோதனை செய்தனர். அப்போது கழிவறைக்குள் வெனிட் சகாயம் தீக் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோத்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு  ஆயுள் தண்டனை

திருப்பூர், ஜன. 3- திருப்பூரில் பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலி யல் துன்புறுத்தல் செய்த வழக்கில் வாலிபருக்கு  ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பூபதி ராஜா(27).இவர் குடும்பத்தோடு திருப்பூர் பாப்பன் நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த  2017ம் ஆண்டு பிரசவத்திற்கு பூபதிராஜாவின் மனைவி  சொந்த ஊருக்கு சென்றுள்ளார், இந்நிலையில் அதே  பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி சிறுமியை திருமண ஆசை  கூறி திண்டுக்கல் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்  தல் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி மாயமான தால் அவரது பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து  மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்து, திண்டுக்கல் சென்று சிறுமியை மீட்டு பூபதிராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  இந்நிலையில் செவ்வாயன்று வழக்கை விசாரித்த நீதிபதி  ஜெயந்தி, குற்றவாளியான பூபதி ராஜாவிற்கு ஆள்  கடத்தல் பிரிவிற்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம்,  பாலியல் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.