சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மகாவிஷ்ணு பேசியிருந்த வீடியோவை, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘மோட்டிவேஷனல் ஸ்பீச்’ என்ற பெயரில், பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மூட நம்பிக்கையை பரப்பும் வகையில் பேசியதுடன் ஆபாசமான கருத்து களையும் தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளி களை இழிவுபடுத்தி இருக்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை காவல்துறையினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரை, செப்டம்பர் 20 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மூடநம்பிக்கை கருத்துகளை அரசுப் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணுவின் வீடியோவை, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.