மகாவிஷ்ணுவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல்!
செப். 11 - சென்னை அசோக் நகா் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளி மாணவ, மாண வியர் மத்தியில் சனாதனம், மூடநம்பிக்கை கருத்துக்க ளை பிரச்சாரம் செய்த ஆபாசப் பேச்சு பேர்வழி மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகள்- பெண்களை இழிவுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலை யில், 3 நாள் அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படகு மீது கப்பலை மோதவிட்டு தாக்குதல்!
இலங்கை அராஜகம்
நாகப்பட்டினம்,செப்.11- நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சக்தி வேல், தேவராஜ், கார்த்திகே யன், சதீஷ் ஆகிய 4 மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள், செவ்வா யன்று மாலை கோடியக் கரை தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற் படை அதிகாரிகள் அவர் களின் கப்பலை கொண்டு மீனவர்களின் படகு மீது மோதி தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
இதனால் மீனவர்களின் பைபர் படகானது நடுக்கட லில் கவிழ்ந்தது. 4 மீனவர் களும் கடலில் தத்தளித்த போது அவர்களுக்கு எந்த ஒரு முதலுதவியும் செய்யா மல் இலங்கை கடற்படை அதிகாரிகள் அவர்களுடை ய கப்பலில் ஏற்றி 6 மணி நேரம் விசாரணை செய்து அவர்களை காப்பாற்றாமல் படகின் அருகிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
பெரும் போராட்டத் திற்குப் பிறகு, புதனன்று காலை கரைக்குத் திரும்பிய மீனவர்களுக்கு தற்போது நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதனிடையே, நடுக்கட லில் படகு கவிழ்ந்து மீன வர்கள் தத்தளிக்கக்கூடிய வீடியோ காட்சிகளும், அவர்களை சக தமிழக மீனவர்கள் மீட்கக்கூடிய காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
வட மாநிலங்களில் நிலநடுக்கம்!
புதுதில்லி, செப். 11 - பாகிஸ்தானில் புதன்கிழமை பகல் 12.58 மணியள வில், 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் மட்டுமன்றி, அண்டை நாடு களான ஆப்கன் மற்றும் இந்தியாவிலும் இந்த நிலநடுக் கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சில இடங்களிலும் நிலநடுக்கம் உண ரப்பட்டது.